கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலைமை பாரதூரமான விடயம் என குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற மருத்துவர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments