WIN! 👊👊
Sri Lanka clinch a thriller against India. Win by 6 wickets 👏
It's a hat-trick of wins for Sri Lanka in #AsiaCup2022
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய சுப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி, இந்திய அணியை 6 விக்கட்டுக்களால் தோல்வியடைய செய்துள்ளது.
போட்டியில் 173 என்ற இந்தியாவின் ஓட்ட இலக்கை, இலங்கை அணி, 19.5 ஓவர்களில் அடைந்து போட்டியில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றது.
இதில் ரோஹிட் சர்மா 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் தில்சான் மதுசங்க 3 விக்கட்டுக்களையும் தசுன் சானக்க 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இலங்கை அணி 19.5 ஓவர்களில் 174 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களை பெற்றார்.
0 Comments