Ticker

6/recent/ticker-posts

பேராதனை பல்கலைக்கழகத்தின் அதிர்ச்சி ஆய்வு - இலங்கையில் ஒரு குடும்பத்தின் மீது 58 லட்சம் கடன் சுமை...

 


நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, இந்த ஆண்டு மே மாதமளவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபாய் கடனாளியாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.


பல்கலைக்கழகத்தின் குறித்த பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் 15 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கடனாளியாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments