எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை பகிர்ந்துள்ளார்.
ஆவணத்தின்படி,
லங்கா auto டீசல் லிட்டருக்கு 31.88 ரூபா நஷ்டம் பதிவாகியுள்ளது.
அதேவேளை பெட்ரோல் 92 லிட்டருக்கு ரூபா 77.35 இலாபம் என பதிவாகியுள்ளது
மேலும் பெட்ரோல் 95 இல் லிட்டருக்கு ரூபா 187.43 பதிவாகி உள்ளது.
மேலும் லங்கா சுப்பர் டீசல் லிட்டருக்கு 48.30 இலாபம் பதிவாகி உள்ளது.
அமைச்சரின் கூற்றுப்படி இந்த இலாப நட்ட கணக்கு கடந்த 30 நாட்களின் விலைகள், கடந்த 30 நாட்களின் சராசரி கொடுப்பணவுகள் ,
கடந்த 30 நாட்களின் சராசரி நாணய மாற்று விகிதங்கள், போக்குவரத்து செலவுகள் மற்றும் முழு டீலர் மார்ஜின்கள் ஆகியவை அடங்கும்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments