ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயம் ஆகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணியாத மாசா அமினி என்ற 22 வயது பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அவர் திடீரென இறந்தார். இதையடுத்து கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் ஈரானில் குர்க்கிஸ்தான் மாகாணத்தில் தொடங்கிய இந்த

போராட் டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவி விட்டது. பெண்களின் இந்த தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் மனித உரிமை அமைப்பு இயக்குனர் தெரிவித்து உள்ளார். ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி, கனடா போன்ற நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6