சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர்.


இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.8 மெக்னிடியுட் அளவிலான இந்த நில அதிர்வினை அடுத்து பல மணிசரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு பல வீதிகள் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு இது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாரிய அணைக்கட்டுக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 40 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.