Click Last Moment win Srilanka 👇video
ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில்பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று 6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க
21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.தனஞ்ச டி சில்வா 28 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் ஹரிஷ் ரஹூப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நஷீம் ஷா, சதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும் இப்திகர் அஹமட் 32 ஓடட்ங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
அதன்படி, ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
0 Comments