2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் அணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் வாக்களிப்பை புறக்கணித்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தனர்
0 Comments