எரிபொருள் வரிசையில் காத்திருந்த கார்
ஒன்றின் மீது, இரும்பு குழாய் ஒன்று விழுந்த சம்பமொன்று கொழும்பு-நகரமண்டப பகுதியில் பதிவாகியுள்ளது.
நகர மண்டபத்திற்கு அருகில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு அருகே அடுக்கு மாடிக் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் இருந்து தவறி வீழ்ந்த இரும்புக் குழாய் ஒன்று கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது வீழ்ந்துள்ளது.
குறித்த குழாய் குழாய் காரின் முன்பக்க கண்ணாடியை துளைத்து காரின் மீது விழுந்ததாகவும், அப்போது காரின் சாரதியும் காருக்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தெய்வாதீனமாக காரின் சாரதி உயிர்த்தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments