வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள்

குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று காலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்..

இதன்போது, ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR அமைப்புடன் வழங்கப்படும் எரிபொருளின் அளவு பற்றிய தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, மீன்பிடித் துறை, விவசாயத் தேவைகள், தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.