தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான (QR CODE) புதிய பதிவுகள் சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடம்பெறாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் சில திருத்தப்பணிகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், QR முறைமையை ஏற்கனவே பயன்படுத்திவரும் பயனாளர்களுக்கு இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments