தாய்லாந்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இலங்கையில் உத்தியோகப்பூர்வ வீடொன்றை வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளதாக அரசாத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
கோட்டாபய ராஜபக்ஸ, பதவி காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கிடையாது என்பதுடன், அவர் பதவி விலகி, பொறுப்புக்களை கைவிட்ட ஜனாதிபதி என்பதனால், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் அவருக்கு உரித்தாகாது என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டம் கூறியுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் இதனை அண்மையில் கூறியிருந்தார்.
ஏதோ ஒரு வகையில் உத்தியோகப்பூர்வ வீடொன்று கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வழங்கப்படும் பட்சத்தில், அதனை நீதிமன்றத்திற்கு முன்பாக சவாலுக்கு உட்படுத்த முடியும் என்பதனால் உத்தியோகப்பூர்வ வீடொன்று வழங்குவது இந்த தருணத்தில் பொருத்தமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், கோட்டாபய ராஜபக்ஸ தாயகம் திரும்பும் பட்சத்தில், அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க முடியும் என்பதுடன், மிரிஹான பகுதியிலுள்ள அவரது பிரத்தியேக வீட்டை புதுப்பித்து வழங்க முடியும் எனவும் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments