ஹோமாகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை 2 பேர் திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


இந்த மோட்டார் சைக்கிள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (27) இரவு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கலாவிலவத்தை பகுதியிலுள்ள கடையொன்றுக்கு இரவு உணவு வாங்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.