மாலபே பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முச்சக்கரவண்டியில் வருகைத் தந்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வலஸ்முல்ல-கொக்கல்லான பகுதியில் வசித்துவரும் நபரே இவ்வாறு முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.