தலைகள் ஒட்டிப்பிறந்த இரு குழந்தைகள்!
வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயதான சிறுவர்களை பலமணி நேரம் சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் மூலமாக வெற்றிகரமாக பிரித்து மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆச்சரியமூட்டும் இந்த அறுவை சிகிச்சை நவீன மருத்துவத்தின் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
குறித்த 2 சிறுவர்களையும் பிரிப்பதற்கான கடைசி அறுவை சிகிச்சைக்கு சுமார் 33 மணி நேரம் பிடித்தது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இந்த இரண்டு சிறுவர்களின் மூளைகளின் ஒரு பகுதி இருவருக்கும் பொதுவாக இருந்தது. இதயங்களுக்கு செல்லும் ஒரு முக்கிய நரம்பும் இருவருக்கும் பொதுவான பாதையில் இருந்தது. இதனால் பல மாதங்கள் ஆய்வு செய்த மருத்துவர்கள் மெய்நிகர் எனப்படும் விர்ச்சுவல் முறையில் பல அறுவை சிகிச்சைகளுக்கு முன்னோட்டம் நடத்தினர்.
உலகில் சுமார் 60,000 பிறப்புகளில் ஒரு பிரசவத்தில் இது போன்ற குழந்தைகள் உடல் ஒட்டி பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments