சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள்வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராமாக்ஞ் நிக்காயாவின் மாநாயக்கர் மகுலேவே விமல தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி தவிர்ந்த ஏனைய பிரதான கட்சிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன.
சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என அந்தக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
அந்த அரசாங்கத்தை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து, வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள ராமாக்ஞ் நிக்காயாவின் மாநாயக்கர், அரசியல் தொடர்பில் பேதங்கள் இருந்தாலும், தலைமைத்துவம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments