ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கதித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளரான வசந்த முதலிகே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினையிட்டு நாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை தடுத்து வைப்பது, பொய்யான குற்றங்களை சுமத்துவது என்பன சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.
0 Comments