Ticker

6/recent/ticker-posts

முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் , '' அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் '' ஆரம்பமானது.

 


முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு கோரி 

தொழில்சார் முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தினர் பிலியந்தலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தொழில்முறை முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர, தெரிவிக்கையில்;

ரணில் – ராஜபக்ச அரசாங்கம் முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓட்டுனர்களின் வயிற்றில் அடித்துள்ளது. QR முறையில் 5 லீற்றர் பெற்றோல் எங்களுக்கு போதாது.

பிலியந்தலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நடைபெறும்.

மேலும் இந்த அரசாங்கம் வீட்டிற்கு செல்லும் வரை எங்கள் எங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்தார்

Post a Comment

0 Comments