காங்கேயனோடை நிருபர்)
காத்தான்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசலை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இளம் வர்த்தகர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி ரெலிகொம் வீதி இரண்டாம் குறுக்கு லேனில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தார் எனக் கூறப்படும் இளம் வர்த்தகர் ஒருவரை (2) செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதுடன் அவரது வர்த்தக நிலையை களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டு எட்டு பெரல்களில் அடைக்கப்பட்டிருந்த 1,510 லீற்றர் டீசலை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சுகரின் ஆலோசனைக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டுதலுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த டீசல் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த டீசல் கூடிய விலைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக காத்தான்குடி பொலிஸர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட டீசலையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments