சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து அணி முன்னாள் தலைவர் ரொஸ் டெய்லர், தனது சுயசரிதையை ‘ரொஸ் டெய்லர் பிளக் அண்ட் வைட்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் சக வீரர்களாலேயே இனவெறிக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: “நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது அழகான வெள்ளைக்காரர்களின் விளையாட்டு. அவர்களுக்கு இடையில் நான் பழுப்பு முகமாக இருந்தேன். தடிமனான தோலை நகையாடுவது எளிது. ஆனால், அது சரியான செயலா? உடை மாற்றும் அறைகள் கேலியின் பண்டமாற்று கடைகள் போல் இருந்தன. நியூசிலாந்து மக்கள் என்னை மவோரி அல்லது இந்தியன் என்று நினைத்தனர்.


ஒருமுறை நியூசிலாந்து வீரர் ஒருவர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் பாதி நல்லவர். ஆனால் ரொஸ் நான் எந்த பாதியை குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியவில்லை” என்றார். நான் பாதி வெள்ளை இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை பாதி நல்லவர் என்று குறிப்பிடுவது புரிந்தது.”