இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தென்படுகின்றது. ஆனபடியினால் நாட்டின் தென் அரைப்பிராந்தியத்தில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று சுமார் 12.10 மணியளவில் கப்பச்சி, தம்மன்னேகுளம் மற்றும் உப்புவேலி போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

கடல் பிராந்தியங்களில் 
****************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 

கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.