Ticker

6/recent/ticker-posts

பொதுஜன பெரமுனவிலிருந்து ஜீ.எல். பீரிஸை நீக்கும் சாத்தியம்..

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸூற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. 

பேராசிரியர் ஜி.எல் பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அக்கட்சியின் ஸ்தாபகர்,பொதுச்செயலாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வேட்பு மனுத்தாக்கல் இடம்பெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகபெருமவின் பெயரை பரிந்துரைத்தார். எதிர்க்கட்சி தலைவரின் முன்மொழிவை பொதுஜன பெரமுனவின் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்றத்தின் ஊடான ஜனாதிபதி தெரிவில் பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.


பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு ஆதரவு வழங்குவது முறையற்றது. டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்கவதே நியாயமானது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் அக்கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்துக்கு எதிர்பு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுடன், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான நாலக கொடவேஹா,சரித ஹேரத்,டிலான் பெரோரா,ஜி.எல் பீரிஸ் உட்பட 16 உறுப்பினர்கள் ஒன்றினைந்து அரசாங்கத்தின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்தும் வகையில் செயற்படுவதால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் சிரேஷ்ட தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸை பதவியில் இருந்து நீக்குமாறு பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு அறிவுறுத்தியதாக அறிய முடிகிறது.

Post a Comment

0 Comments