Ticker

6/recent/ticker-posts

கல்முனையை கருவறுக்கும் போதைவஸ்து பாவனையும், தொடரும் அதிரடி கைதுகளும்.

 கல்முனையை கருவறுக்கும் போதைவஸ்து பாவனையும், தொடரும் அதிரடி கைதுகளும்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டம் 'வாகரை' பிரதேசத்தில் வைத்து கல்முனையை சேர்ந்த பிரபல போதைவஸ்து வியாபாரியான  "ரியாத்" என்பவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் கஞ்சா (kg) மற்றும் அதிகளவான ஐஸ் போதை வஸ்துக்களை கல்முனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இவர் மடக்கிப்பிடிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.


சில வருடங்களுக்கு முன்னர் கல்முனை மொய்தீன் ஜூம்மா பள்ளிவாசலில் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பாதுகாப்பு படையினர், அரசு ஊழியர்கள், ஊர் மக்கள், அரசியல் பிரதிநிதிகள், அனைவரும் சேர்ந்து கல்முனையின் பகுதிகளில் போதை வஸ்துக்களை பாவனை செய்யக் கூடாது எனும் கருப்பொருளில் சத்திய பிரமாண நிகழ்வினை நடத்தி இருந்தனர். அதன் பிரகாரம் கல்முனையில் உள்ள சில்லறை கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் சிகரெட் கூட விற்பனை செய்யக்கூடாது என சத்தியவாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். ஆனாலும் கல்முனை பெரிய ஜும்மா பள்ளி வேண்டுகோளையும் மீறி முன்னர் இருந்ததையும் விட அதிக அளவில் கல்முனை பிரதேசமெங்கும் போதைப்பொருள் விற்பனையாகிக் கொண்டிருந்தன.

அதிலும் குறிப்பாக தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள இந்த ரியாத் எனும் நபர் போதைவஸ்துகளை விதவிதமாகவும் மொத்தமாகவும், சில்லறையாகவும் இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் குறி வைத்து விற்பனை செய்து ஆடம்பரமாகவும் வசதியாகவும் தன் வாழ்வினை மாற்றிக் கொண்டார். கல்முனையில் உள்ள பிரபல அரசியல் பிரமுகர்களின் கைக்கூலியான இவர் அரசியல்வாதிகள் உடைய அனுசரணையின் கீழ் தனது வியாபாரத்தை சுதந்திரமாகவும்


, தைரியமாகவும்  மேற்கொண்டார். கல்முனையில் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் தங்களுடைய வாழ்வை தொலைத்து தொடர்ந்து போதைக்கு அடிமையாயினர். இப்பொழுது இவர் அதிர்ஷ்டவசமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது இந்தக் கைதைத் தொடர்ந்து இன்னும் பல சில்லரை மொத்த வியாபாரிகளை போலீசார் வலை வீசி தேடிக் கொண்டிருக்கின்றனர். ஊரின் மீது அக்கறையும் இளைஞர்களின் மீது கரிசனையும் கொண்ட சகலரும் இவ்வாறான போதை வியாபாரிகளை போலீசாருக்கு அடையாளப்படுத்துங்கள்.

போதை பொருள் வியாபாரிகளே! நீங்கள் இத்தோடு நிறுத்தி உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அல்லாதுவிடில் எதிர்காலத்தில் உங்களுடைய புகைப்படங்களும் பதிவிறக்கம் செய்யப்படலாம் இது எமது எதிர்கால சந்ததிகளின் வளமான எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கான பணியே தவிர யாரையும் தனிப்பட்ட நோக்கத்தோடு இழிவுபடுத்தும் செயல் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறோம்.

நன்றி 

புகைப்படங்கள் தகவல் அனுப்புநர்.

Post a Comment

0 Comments