காலிமுகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள்தொடர்பான நட்டஈட்டை, போராட்டக்காரர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.


போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு உரிமை காணப்படுகின்றது என கூறிய தரப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடமிருந்து முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைவாகவே, நகர அபிவிருத்தி அமைச்சுக்கு கீழ் காணப்படும் காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் அகற்றியதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார் 
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6