இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள ´டைல்ஸ்´ ( தரை ஓடுகள் ) உட்பட கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பல வகையான மூலப்பொருட்கள் மற்றும் வாகனங்களை நிபந்தனைக்குட்பட்டு இறக்குமதி செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதலீட்டுச் சபை திட்டங்கள் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட Condominium திட்டங்கள், கலப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், ஹோட்டல் திட்டங்கள் மற்றும் அரசாங்கத் திட்டங்களுக்காக குறித்த இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மீள் விற்பனை நோக்கத்திற்காக இது தொடர்பான சாதனங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக் கூடாது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான கொடுப்பனவு 180 நாட்களுக்குள் கடன் கடிதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர், திறைச்சேரி செயலர், நிதியமைச்சர் ஆகியோரின் அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளடங்குகிறது.
0 Comments