Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமிய கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

 மருதமுனையில்

இஸ்லாமிய கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

----------------------------------

(றாசிக் நபாயிஸ்,

ஏ.எல்.எம்.ஷினாஸ்,

பி.எம்.எம்.ஏ.காதர்)

------------------------------

ஏனைய பிரதேசங்களில் இருப்பது போல் மாற்றுமத சகோதரர்களுடன் உறவு பாலத்தை கட்டுவதற்கான ஒரு வழியை அமைக்க வேண்டும். இது இஸ்லாத்தின் ஒரு அடிப்படையாகும். என நேற்று (12) வெள்ளிக்கிழமை இரவு மருதமுனை அல்-மனார் வீதியில் அமைந்துள்ள ' Bule C Restaurant' யில் இடம் பெற்ற இஸ்லாமிய கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் 

பிரபல இஸ்லாமிய மார்க்க சொற் பொழிவாளரும், ஸம் ஸம் பவுன்டேஷன் நிறுவனருமான அல்-ஹாஜ் அஷ்ஷெய்க் முப்தி யூசூப் ஹனீபா அவர்கள் கருத்து தெரிவித்தார்.


மருதமுனை பறக்கத் டெக்ஸ் அனுசரணையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 

தொடர்ந்து முப்தி அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எல்லோரையும் உள்வாங்கிக் கொண்ட மார்க்கமாக எமது இஸ்லாம் மார்க்கம் இருப்பதனால் சமூக பொறுப்பு கூறல் உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். பள்ளிவாசல் இமாமுக்கும் கோயில் பூசாரிக்கும் கட்டாயம் ஒரு உறவு பாலம் அமைக்கப்பட வேண்டும். எனவும் வேண்டிக் கொண்டார்.


சம்மாந்துறை கிராமத்தில் 

20,000 பயனாளிகளைக் கொண்டு பல வருடங்களாக 


நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா இஸ்லாமிய கடன் திட்டம் தொடர்பான  விழிப்புணர்வு தொடர்பான வீடியோ ஒன்றும் போட்டுக் காட்டப்பட்டு அது போல மருதமுனையில் நடைமுறைப்படுத்துவதற்குரிய முன்னேற்பாடுகளை செய்வதற்கும் மற்றும் பெண்களில் பங்களிப்புக்கள் கட்டாயம் இதில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் முப்தி

அவர்களால் வேண்டப்பட்டது. 


இக்கடன் திட்ட முறைக்கு அதிக முதலீடுகளை தான் முன்வந்து தருவதாக மருதமுனை பறக்கத் டெக்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் எம்.ஜ.பரீட் தெரிவித்ததாகவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இதன் நோக்கம் மருதமுனையில் இருந்து நூறு வீதம் வட்டியை ஒழிப்பதுடன் ஏழைகளுக்கு தொழில் செய்ய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுமாகும்.

இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேச செயலாளர்கள்,  பள்ளிவாசல் நிர்வாகிகள், விரிவுரையாளர்கள், கல்வியலாளர்கள், அரச ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

Post a Comment

0 Comments