வெல்லவாய-
பள்ளிவாசலுக்கு அருகில்
வைத்து ஓகஸ்ட் 10ஆம்
திகதி காணாமல்
போன 5 வயது சிறுமி,
பண்டாரவளை வாராந்த
சந்தைப் பகுதியில் வைத்து
வெல்லவாய பொலிஸாரால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், யோகட்
வாங்கித் தருவதாக
தெரிவித்து சிறுமியை அழைத்துச் சென்ற நபரும்
கைதுசெய்யப்பட்டுள்ளார.
காணாமல் போன
சிறுமியின் வீட்டில் கூலி
தொழில் செய்து வந்த
தியத்தலாவை- குருதலாவ
பகுதியைச் சேர்ந்த 25
வயது நபரே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திச்சென்ற
நபர், வெல்லவாய நகரிலிருந்து
பண்டாரவளைக்கு
பஸ்ஸில் சென்று அங்கு
வாராந்த சந்தைப் பகுதியில்
இரவைக் கழித்துள்ளார்.
குருதலாவையிலுள்ள
அவரது வீட்டுக்குக்
மறுநாள் செல்ல முற்பட்ட
போது சந்தைப் பகுதியில்
வைத்து பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டு,
சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பணத்துக்கு
விற்பதற்கு சந்தேகநபர்
தயாராகி இருந்துள்ளமை
ஆரம்பக்கட்ட விசாரணைகள்
மூலம் தெரியவந்துள்ளது.
0 Comments