Ticker

6/recent/ticker-posts

உழ்ஹிய்யா இறைச்சி விநியோகத்தில் முரண்பாடு; பள்ளி நிர்வாகி படுகொலை..


எம்.எப்.எம்.பஸீர்

அனு­ரா­த­புரம் மாவட்டம், பர­சன்­கஸ்­வெவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கம்­மி­ரி­கஸ்­வெவ, அசி­ரிக்­க­மவில் கடந்த 12 ஆம் திகதி ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து, பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபையின் முன்னாள் உறுப்­பினர் ஒரு மீது நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலில் அவர் உயி­ரி­ழந்த சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் இது­வரை ஆறு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிசார் தெரி­விக்­கின்­றனர்.


பள்­ளி­வா­சலில் ஆரம்­பித்த தக­ரா­றுக்­காக, வீடு வரை சென்று ஒருவர் உயி­ரி­ழக்கும் வரை தாக்­குதல் நடாத்­து­வது என்­பதும், அதனை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ஒரு­வரே முன்­னெ­டுப்­பது என்­பதும் எமது முஸ்லிம் சமூக கட்­ட­மைப்பு தொடர்­பி­லான மீள் வாசிப்பை வலி­யு­றுத்தும் விட­ய­மா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அனு­ரா­த­புரம் பர­சன்­கஸ்­வெவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கம்­மி­ரி­கஸ்­வெவ, அசி­ரிக்­கம பிர­தே­சத்தில் இச்­சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது. கட்டுத் தம்பி ஷரீப் எனும் 67 வய­தான நபரே இவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வ­ராவார்.


விடி­வெள்­ளி’க்கு கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்­களின் படி, இந்த கொலைச் சம்­ப­வத்தின் பின்­னணி கடந்த ஜூலை 10 ஆம் திகதி கொண்­டா­டப்­பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் உழ்­ஹிய்­யா­வுடன் தொடர்­பு­பட்­ட­தாகும்.


ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்­தன்று பல ஊர்­க­ளிலும் உழ்­ஹிய்யா கட­மைகள் நிறை­வேற்­றப்­ப­டு­வதை போலவே அசி­ரிக்­க­ம­விலும் கூட்டு முறையில் அக்­க­டமை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.


இதன்­போது, அறுக்­கப்­பட்ட பிரா­ணி­களின் மாமிசம், ஊர் ஜமா அத்­தி­ன­ருக்கு பங்கு பிரிக்­கப்­பட்டு பொதி­யி­டப்­பட்ட பின்னர், மேலும் ஒரு தொகை இறைச்சி பிறி­தொரு தன­வந்­த­ரி­ட­மி­ருந்து அச­ரிக்­கம பள்­ளி­வா­ச­லுக்கு கிடைத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எனினும் ஏற்­க­னவே அறுக்­கப்­பட்ட பிரா­ணி­களின் மாமிசம் பொதி­யி­டப்­பட்­டி­ருந்­த­மையால் முதலில் அதனை பகிரும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.


அதன் பின்னர் சில இறைச்சிப் பொதி­களும், பின்னர் தன­வந்தர் ஒருவர் மூல­மாக கிடைக்கப் பெற்ற இறைச்சித் தொகை­யு­மாக சேர்த்து ஒரு தொகை இறைச்சி மிகு­தி­யாக இருந்­துள்­ளது.


இவ்­வா­றி­ருக்­கையில், நாட்டில் பர­வ­லாக இடம்­பெறும் மின் தடை அச­ரிக்­க­ம­விலும் அமுல் செய்­யப்­ப­டு­வதால், பின்னர் கிடைத்த இறைச்­சியை இருளில் பகிர்­வது சாத்­தி­ய­மில்­லாமல் போகவே, உழ்­ஹிய்யா கட­மையை முன்­னெ­டுத்­த­வர்கள் குறித்த இறைச்­சியை பள்­ளி­வாசல் அறை ஒன்றில் வைத்­து­விட்டு வீடு திரும்­பி­யுள்­ளனர்.

எனினும் இறைச்­சியை விநி­யோ­கிக்­காது பள்­ளி­வா­ச­லுக்குள் வைத்­தி­ருந்­ததால் ஆத்­தி­ர­ம­டைந்த மற்­றொரு குழு, பள்­ளி­வா­சலின் அறையை உடைத்து அவ்­வி­றைச்­சியை வெளியே எடுத்­துள்­ள­துடன், அவ்­வி­றைச்சித் தொகையை பள்­ளி­வாசல் நிர்­வாகம் மறைத்து வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.எனினும் ஊர் மக்கள் அனை­வ­ருக்கும் நிலைமை பின்னர் விளக்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், ஊர் மக்கள் அனை­வ­ருக்கும் பகிர குறித்த இறைச்சி போது­மா­ன­தாக இல்லை என்­பதால், ஊரி­லுள்ள வித­வை­க­ளுக்கு அதனை பகிர்­வது என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.


எவ்­வா­றா­யினும் இந்த இறைச்சிப் பிரச்­சினை தொடர்பில் பொலி­சா­ருக்கும் யாரோ ஒரு­வரால் அறி­விக்­கப்­ப­டவே, அங்கு வந்­துள்ள பொலி­ஸாரும் அதனை சம­ரசம் செய்­து­விட்டு திரும்ப முயன்­றுள்­ளனர்.


எனினும் அங்­கி­ருந்த ஒரு குழு­வினர், இறைச்­சியை மறைத்து வைத்­த­மைக்­காக நிர்­வாக சபை­யி­னரைக் கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.


பின்னர் நிலை­மையை சமா­ளிக்க, பொலிஸார் பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை தலைவர் மற்றும் செய­லா­ளரை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்­றுள்­ள­துடன், இறைச்சித் தொகை­யையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்­துள்­ளனர். எனினும் குறித்த ஒரு தொகை இறைச்சி பழு­த­டைந்­த­மையால் அதனை பொலி­ஸி­லேயே விட்­டு­விட்டு வந்­துள்­ளனர்.


இந்த உழ்­ஹிய்யா விட­யத்தில் பொலிஸார் செயற்­பட்ட விதம் பொது மக்­க­ளி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதா­வது பள்­ளி­வா­சலை உடைத்து இறைச்­சியை எடுத்­தோரை வீட்­டு­விட்டு, பள்ளி நிர்­வாக சபை­யி­னரைக் கைது செய்ய பொலிஸார் எடுத்த நட­வ­டிக்­கையே அதற்­கான கார­ண­மாகும்.


இவ்­வா­றான நிலையில், பள்­ளியின் தலைவர், செய­லாளர் கைது செய்­யப்­பட்ட தினத்தின் இரவு வேளையில் அச­ரிக்­க­மவில் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­களின் வீடு­க­ளுக்கு அடை­யாளம் தெரி­யாதோர் கல் வீச்சு தாக்­கு­த­லையும் நடத்­தி­யுள்­ளனர்.

இந்த சர்ச்சை கார­ண­மாக ஹஜ்ஜுப் பெரு­நாளை தொடர்ந்து வந்த வெள்ளிக்கிழ­மை­யன்று சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்­வாக சபை கலைந்­து­விட்­ட­தாக பள்­ளி­வாசல் இமாம் மூலம் ஜும்ஆ தொழு­கையின் பின்னர் அறி­விக்­கப்­பட்டு புதிய நிர்­வாக சபையை தெரிவு செய்­வ­தற்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.


அதன்­படி அதற்கு அடுத்த ஜும்ஆ தினத்­தன்று 12 பேர் கொண்ட நிர்­வாக சபை தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும் அவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்ட புதிய நிர்­வாக சபை­யி­லி­ருந்த நால்வர் அதி­லி­ருந்து வில­கு­வ­தாக பின்னர் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இந்த தொடர் சம்­ப­வங்கள் அச­ரிக்­க­மவில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த பின்­ன­ணி­யி­லேயே கடந்த 12 ஆம் திகதி வெள்­ளி­யன்று நிர்­வாக சபை­யி­லி­ருந்து வில­கி­ய­வர்கள் தொடர்பில் ஆரா­யப்­பட்ட போது மீள பிரச்­சினை உரு­வா­கி­யுள்­ளது. இதன்­போது பள்­ளி­வா­ச­லுக்­குள்­ளேயே மோதல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அணிந்­தி­ருந்த சாரன்­களை மடித்துக் கட்­டிக்­கொண்டு, மிக அநா­க­ரி­க­மான முறையில் இரு சாராரும் மோதி­யுள்­ளனர்.


இதன்­போது, முன்­னைய நிர்­வாக சபையில் உறுப்­பி­ன­ராக இருந்த (அதா­வது ஹஜ்ஜுப் பெருநாள் உழ்­ஹிய்யா குறித்த பிரச்­சினை ஏற்­பட்ட போது) கட்டுத் தம்பி ஷரீப் எனும் 67 வய­தான முன்னாள் சிவில் பாது­காப்பு குழு உறுப்­பினர் தள்­ளி­வி­டப்­பட்டு, கீழே வீழ்ந்­துள்ளார். எவ்­வா­றா­யினும் அங்­கி­ருந்­த­வர்கள் அவ­ருக்கு உத­வி­யுள்­ள­துடன் பள்­ளி­வா­ச­லுக்கு அருகே அமைந்­துள்ள அவ­ரது வீட்­டுக்கும் அனுப்பி வைத்­துள்­ளனர்.


இவ்­வா­றான நிலையில், புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட நிர்­வாக சபையில் அங்­கத்­த­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டவர் எனக் கூறப்­படும் நபர் ஒரு­வரும், அவ­ரது சகோ­தரர், சகோ­த­ரரின் மகன், மனைவி, தகப்பன், சகோ­த­ரியின் மகன் என ஒரு குழு கட்டுத் தம்பி ஷரீப்பின் வீட்­டுக்குச் சென்று அவர் மீது பொல்­லுகள் கொண்டு சர­மா­ரி­யாக தாக்­குதல் நடாத்­தி­யுள்­ளனர்.


ஜும்ஆ தொழு­கையின் பின்னர் பள்­ளி­வா­சலில் ஏற்­பட்ட பிரச்­சி­னையை அடுத்து, சுமார் பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் இந்த தாக்­குதல் நடந்­த­தாக பொலிஸ் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது.


இதன்­போது படு­கா­ய­ம­டைந்­துள்ள கட்டுத் தம்பி ஷரீப் எனும் 67 வய­தான நபர், பர­சன்­கஸ்­வெவ வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி­ரி­ழந்­துள்ளார்.


இந் நிலையில் பொலிஸார் இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து முதலில் நால்­வரைக் கைது செய்­த­துடன் பின்னர் சர­ண­டைந்த பெண் ஒருவர் உள்­ளிட்ட இரு­வரை கைது செய்­தாக கூறப்­ப­டு­கின்­றது. கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பள்­ளி­வா­சலில் புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட நிர்­வாக சபை உறுப்­பினர் ஒரு­வரே முக்­கிய சந்­தேக நபர் எனவும், ஏனையோர் அவ­ரது உற­வி­னர்கள் எனவும் அறிய முடி­கின்­றது. கைது செய்­யப்­பட்ட ஆறு பேரும் எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், மேல­திக விசா­ர­ணைகள் பர­சன்­கஸ்­வெவ பொலி­சாரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.


எனினும் பர­சன்­கஸ்­வெவ பொலி­சாரின் விசா­ர­ணைகள் தொடர்பில் கம்­மி­ரி­கஸ்­வெவ, அச­ரி­கம பிர­தேச மக்­க­ளி­டையே பாரிய விமர்­சனம் நில­வு­கி­றது. இது விட­யத்தில் பொலிசார் நீதி­யாக செயற்­ப­டு­வார்­களா என்­பதில் பொது மக்கள் சந்­தேகம் கொண்­டுள்­ளனர். எனவே இந்த கொலைச் சம்­பவம் மற்றும் அதன் பின்­னணி, பொலி­ஸாரின் வினைத்­தி­ற­னன்ற செயற்­பா­டுகள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் அவ­சியம் என பொது மக்கள் தெரி­விக்­கின்­றனர்.


அதேபோல, பள்­ளி­வாசல் நிர்­வாக சபைகள், அதன் அங்­கத்­த­வர்கள் தொடர்­பிலும், இலங்கை வக்பு சபையும் இத­னை­விட அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும் என்­ப­தற்கு இந்த சம்­பவம் மேல­திக சான்­றாகும்.


கொழும்பு உள்­ளிட்ட நகர பகு­தி­களின் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தெரிவுகள் குறித்து வக்பு சபை அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு அவதானம் செலுத்தியிருந்தாலும் (விதி விலக்கான சம்பவங்கள் உள்ளன) முஸ்லிம் கிராமங்களில் அல்லது நகர் பகுதிகளுடன் தொடர்பற்ற இடங்களின் பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பிலும் மேலதிக அவதானம் செலுத்தப்படுதல் அவசியமாகும். பள்ளி நிர்வாக சபை சார்ந்து ஏதேனும் பிரச்சினை ஒன்று மேலெழும் போது உடனடியாக தலையீடு செய்யும் வகையில், வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன விரைந்து செயற்படும் விதமாக பொறிமுறை ஒன்று உடனடியாக அவசியமாகும். இல்லையேல், பள்ளிவாசல்கள் கொலைக் களமாகும் நமது சமூகத்தின் தொடர் வரலாறுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது போய்விடும். கடந்த காலங்களிலும் பள்ளிவாசல் நிர்வாக முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகளால் பல கொலைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.- Vidivelli

Post a Comment

0 Comments