நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த நபரின் மரணத்திற்கு, ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையே காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் (16) சென்றுள்ளார்.
அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதைப்பொருளை செலுத்தியமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து கோப்பாய் பொலிஸார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை யாழில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7இற்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
0 Comments