கட்டுப்பாட்டில் இருந்த கோவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக நாட்டில் நிலவும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டினால் முன்பைப் போன்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், அதன் காரணமாக மிக அவசியமான சூழ்நிலைகளுக்கு மாத்திரமே பீசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பு ஒரு நாளைக்கு 25,000 பீசிஆர் பரிசோதனைகள் வரை சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.