Ticker

6/recent/ticker-posts

பயிர்களை அழிக்கும் விலங்குகளின் பட்டியலில் யானையை நீக்க தீர்மானம்

 


பயிர்களை அழிக்கும்  வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டு யானையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் வருடாந்தம் வன விலங்குகளால்  பயிர்கள் 40 சதவீதம் அழிக்கப்படுவதாக வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில், காட்டு யானையால் ஏற்பட்ட பயிர் சேதம் மிகக் குறைவு. அதாவது 20 வீதம் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காட்டுப்பன்றிகள், குரங்குகள், மயில்கள் மற்றும் தேவாங்குகள் ஆகிய விலங்குகளால் சுமார் 46 சதவீதம் பயிர் சேதம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பதிவான காட்டு யானைகள் மரணங்களின் எண்ணிக்கை 511 ஆகும்.

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, யானை-மனித மோதலால் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டு யானைகளின் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்காவிட்டாலும், நாட்டில் நிலவும் யானை மனித மோதலால் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே, காட்டு யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகளின் பட்டியலில் தொடர்ந்து இருக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments