பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 


அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும் . பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக இருக்காது, இருக்க முடியாது என்ற ஒரு விடயத்தை அனைவரும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் .


ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் தமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.


தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47ஆவது தியாக நினைவு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.