Ticker

6/recent/ticker-posts

ஹிஜாப் தளர்வாக உள்ளது' - விளம்பரங்களில் பெண்கள் நடிக்கத் தடை விதித்த ஈரான்!.. வீடியோ

 



இந்த விளம்பரம் ஈரானின் புனித விதிகளை மீறுவதாக உள்ளது. விளம்பரத்தில் வரும் அப்பெண் தளர்வாக ஹிஜாப் அணிந்து கலாசாரத்தை மீறியுள்ளார். அவர் கண்ணியமாக இல்லை. ஹிஜாப் மற்றும் ஒழுக்க விதிகளின்படி, பெண்கள் இனி விளம்பரங்களில் நடிப்பதற்கு அனுமதி இல்லை.' 

ஈரானில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக உள்ளன. குறிப்பாக ஹிஜாப் அணிவது, சமூக ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை போன்ற வரையறைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இந்த விதிகளை மீறும் பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளையும் ஈரானிய அரசு வழங்குகிறது.

இந்நிலையில், மேக்னம் (Magnum) ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில் பெண் ஒருவர் தனியாக காரில் பயணிக்கும் போது, பக்கத்து இருக்கையை பார்த்து, சில முறை சிரிக்கிறார். பின்னர் காரை நிறுத்தி விட்டு இருக்கையில் கைவைத்து, மேக்னம் ஐஸ்கிரீமை எடுத்து காரில் இருந்து வெளியே வந்து ருசித்து சாப்பிடுகிறார்.

இந்த விளம்பரம் குறித்து, ஈரானின் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம், ‘ஈரானின் புனித விதிகளை மீறுவதாக இந்த விளம்பரம் உள்ளது. விளம்பரத்தில் வரும் அப்பெண், கண்ணியமாக இல்லை, தளர்வாக ஹிஜாப் அணிந்து கலாசாரத்தை மீறியுள்ளார். ஹிஜாப் மற்றும் ஒழுக்க விதிகளின்படி, பெண்கள் இனி விளம்பரங்களில் நடிப்பதற்கு அனுமதி இல்லை' எனத் தெரிவித்துள்ளது.


மேலும் ஈரான் இன்டர்நேஷனல் இங்கிலீஷ் என்ற ட்விட்டர் பக்கத்தில், “ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் பொறுப்பு சரியானதை கட்டளையிடுவது, தீமையை தடுப்பது. பொது ஒழுக்கத்திற்கு எதிராகவும், பெண்களின் மதிப்புகளை அவமதிக்கும் வகையிலும் இரண்டு சர்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டதற்காக ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் நிறுவனமான டோமினோவுக்கு எதிராக ஈரானிய அரசு வழக்கை தாக்கல் செய்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளது


எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments