கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பொருத்தப்பட்டிருந்த பிராணவாயு வழங்கும் கருவி நீக்கப்பட்டிருப்பதோடு அவரால் மீண்டும் பேச முடியுமாகியுள்ளது.
75 வயதான ருஷ்டி, நியுயோர்க் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்கானார். அவர் ஆபத்தான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது ‘தி சாத்தானிக் வேர்சஸ்’ என்ற நூலுக்காக அவர் பல ஆண்டுகளாக உயிரச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வந்தார். இந்த நூல் மதநிந்தனைக்குரியது என்று சில முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபர் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டை மறுத்திருப்பதோடு பிணையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
24 வயதான ஹதி மதார் என்ற அந்த ஆடவர் மேடை மீது ஓடி வந்து, ருஷ்டியின் முகம், கழுத்து மற்றும் வயிற்றில் குறைந்தது 10 தடவைகள் கத்தியால் குத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
லெபனான் பெற்றோருக்குப் பிறந்த ஹதி, ஈரான் புரட்சிக் காவல் படையில் ஈர்ப்புக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
0 Comments