கடந்த மே மாதம் 9ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதி வரையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கான காரணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நிறுவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் அதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு உடனடியாக மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
அவ்வாறானதொரு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டால், இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு யார் தவறான முடிவுகளை எடுத்தார்கள் என்ற உண்மைகளை ஆதாரங்களுடன் இவ் ஆணைக்குழுவில் முன்வைக்க நான் தயாராக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments