நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (25) நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது வழக்கு தொடர்பாகவும், இரண்டாவது வழக்கு தொடர்பாகவும் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோருவதாக வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அந்த அறிக்கையால் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் கூறிய கருத்துக்கள் பொய்யானவை எனவும், அந்த அறிக்கைகளை மீளப் பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்
0 Comments