சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை திருடிய சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள உருக்கு இரும்பு தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (21) அதிகாலை குறித்த தொழிற்சாலையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டே இவை திருடப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் தொழிற்சாலையின் உரிமையாளர் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டுக்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க உத்தரவில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத் வழிநடத்தலில் காரைதீவு பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு உரிமையாளர் உட்பட பணியாளர்களின் வாக்குமூலங்களை பெற்றனர்.
இதன் போது குறித்த கொள்ளைச் சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் இனங்காணப்பட்ட நிலையில் அவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட பொலிஸ் குழு அவரை அணுகி புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில் பல வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சந்தேக நபர் இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை கைதானதுடன் இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதான 21,25,36,48,34 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய திருடப்பட்ட சுமார் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டர் உட்பட உபகரணங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைதான சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்பதும் விசாரணைகளில்தெரிய வந்துள்ளது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments