கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்ற கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநரினால் கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்ட ஏ.எல்.எம். அஸ்மி இன்று (08) திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்க வந்த போது தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இதற்கு முன்னரும் கல்முனை மாநகர ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட என். சிவலிங்கம், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்க வந்த போதும் தடுக்கப்பட்டார்.
இவ்வாறு தொடர்ச்சியாக கல்முனை மாநகர ஆணையாளர்கள் பதவியேற்காமல் தடுக்கப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆளுநர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகளில் மேயர் ஒருபோதும் தலையிட முடியாது. தனக்குரிய அதிகாரத்தின் கீழ் மாநகர ஆணையாளர் நியமணத்தினை மேற்கொண்டுள்ளேன்.
இதனை ஒருபோதும் கல்முனை மேயர் சவாலுக்குட்படுத்த முடியாது. இதனால், கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்க மேயர் அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல், தொடர்ச்சியாக ஆணையாளர்கள் கடமைகளை பொறுப்பேற்பதற்கு இடையூறு விளைவிக்கப்படும் பட்சத்தில் கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடு;க்கப்படும்" என்றார்.
விடியல்.lk
0 Comments