Ticker

6/recent/ticker-posts

உடலில் பெற்­றோலை ஊற்­றி எரி­பொருள் நிலை­யங்­களை தீக்­கி­ரை­யாக்கப் போவ­தாக அச்சுறுத்­திய இரட்டைச் சகோ­த­ரிகள்..

 


தமது உடலில் பெற்­றோலை ஊற்­றிக்­கொண்டு,  எரி­பொருள் நிலை­யங்­களை தகர்க்கப் போவ­தாக அச்­சு­றுத்­திய குற்­றச்­சாட்டில்,இரட்டைச் சகோ­த­ரி­க­ளான யுவ­திகள் இருவர், சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.


பிரித்­தா­னி­யர்­க­ளான 23 வய­தான பிரிட்­டானி லீ, பெத்­தானி லீ ஆகி­யோரே இவ்­வாறு  சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

போதை­யி­லி­ருந்து இவர்கள் இரு­வரும், இங்­கி­லாந்தின் கென்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள 3 எரி­பொருள் நிலை­யங்­க­ளி­லி­ருந்து பெற்றோல் எடுத்து தமது உடலில் ஊற்­றிக்­கொண்­டனர் என நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

கென்­ட­பரி கிறவுண் நீதி­மன்­றத்தில் அரச தரப்பு சட்­டத்­த­ரணி விஷால் மிஸ்ரா வாதா­டு­கையில், பெத்­தா­னியும் பிரிட்­டா­னியும் கென்­ட­பரி லேக்சைட் எரி­பொருள் நிலை­யத்தில் இருப்­ப­தாக அத­கா­ரி­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

தாம் தற்­கொலை செய்­யப்­போ­வ­தா­கவும் அந்த எரி­பொருள் நிலை­யத்தை தகர்க்­கப்­போ­வ­தா­கவும் தொலை­பேசி மூலம் தெரி­வித்­தனர்.

எஸ்ஸோ எரி­பொருள் நிலை­யத்­தையும் தீக்­கி­ரை­யாக்கப் போவ­தாக பெத்­தானி லீ கூறினார்' என்றார்.

20 நிமி­டங்­களின் பின்னர் பொலிஸார் அங்கு வந்­த­போது, பொலிஸார் தம்மை நெருங்­கினால், தம்மை தீக்­கி­ரை­யாக்கிக் கொள்ளப் போவ­தாக, இரட்டைச் சகோ­த­ரிகள் இரு­வரும் எச்­ச­ரித்­த­னராம்.

லைட்டர் ஒன்றை பற்ற வைப்­ப­தற்கு பிரிட்­டானி முயன்றார். அது எரி­யாத நிலையில், அவர்கள் இரு­வரும் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டினர். சிறிது தூரரம் துரத்திச் செல்­லப்­பட்டு அவர்கள் கைது செய்­யப்­பட்­டனர் எனவும் சட்­டத்­த­ரணி விஷால் மஜஸ்ரா கூறினார்.

கெம­ராக்­களில் பதி­வா­கி­யி­ருந்த வீடி­யோக்­களும் நீதி­மன்­றத்தில் காண்­பிக்­கப்­பட்­டன.

அதி­காலை 3 மணி­ய­ள­வில் இச்­ச­கோ­த­ரிகள் எரி­பொருள் நிலை­யங்­களில் வைத்து பெற்­றோலை தமது உடலில் ஊற்­றிக்­கொள்­வ­துடன், பொலி­ஸாரை தகாத வார்த்­தை­களால் திட்டும் காட்­சிகள் வீடி­யோவில் பதி­வா­கி­யி­ருந்­தன.

இவர்கள் நீதி­ப­தியின் முன் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது, அவர்­களின் முகங்­களில் பல வெட்டுக் காயங்­களும் உராய்வுக் காயங்­களும் காணப்­பட்­டன. 

இவர்கள் ஏற்­கெ­னவே போதையில் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்­டமை போன்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­ட­வர்கள் என்­பது தெரி­ய­வந்­தது.

இவர்கள் இரு­வரும் மன­நிலை பாதிப்பு கொண்­ட­வர்கள் அல்லர் என உள­வி­ய­லா­ளர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் இச்­ச­கோ­த­ரிகள் சிறு வய­தி­லி­ருந்து உணர்ச்சி ஸ்திர­மின்­மையைக் கொண்­டி­ருந்­த­வர்கள் என அவர்­களின் சட்­டத்­த­ரணி கூறினார்.

பெத்­தானி மற்றும் பிரித்­தா­னியின் செயற்­பா­டுகள் அவர்­க­ளுக்கும் எரி­பொருள் நிலை­யத்தில் இருந்­த­வர்­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்­தது என்­பது நீதி­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

இச்சகோதரிகள் இருவரும், உயிர் களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை பொருட்படுத்தாமல் தீக்கிரையாக்கும் முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளிகள் என ஒப்புக்கொண்டனர்.  அதையடுத்து அவர்களுக்கு தலா 3 வருடங்கள் மற்றும் 9 மாத சிறைத்தண் டனை விதித்து கென்டபரி கிறவுண் நீதிமன்றம் கடந்தவாரம் தீர்ப்பளித்தது.

Post a Comment

0 Comments