ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையைச் சேர்ந்த இருவரை, நேற்று (27) சாய்ந்தமருது பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
நீண்டகாலமாக கார்களில் சூட்சுமமாக இவர்கள் போதைப்பொருள்களை கடத்தியுள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள பிரபல உணவகத்துக்கு அருகில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது, காரில் போதைப்பொருட்களுடன் பயணித்த மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதான நபர்கள் கல்முனைப்பகுதியை சேர்ந்த 44 மற்றும் 23 வயது மதிக்கத்தக்கவர்களாவர்.
இவர்கள் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6.8 கிராம் மற்றும் ஹெரோயின் 5.58 கிராம் உட்பட, 04 கைத்தொலைபேசிகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கார் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்களை சான்றுப் பொருட்களுடன் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியுள்ளனர்.எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments