நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

ஆறுகள் மற்றும் துணை நதிகளை பயன்படுத்தும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.