பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த மாணவி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “கல்லஞ்சிய” பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​ வயல்வெளியில் உள்ள மரம் ஒன்றில் இவ்வாறு கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு, தகவல் கிடைத்ததையடுத்து கல்லஞ்சிய பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியை மீட்டுள்ளனர்.

சிறுமி தொடர்பான மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.