இப்போது உயிரற்று கிடக்கிறதா? 😓
இது கோள்பேஸ் போராட்டக்கள பூமி!
பலரின் உயிரையும், வியர்வையும், உழைப்பையும், அறிவையும், இரத்தத்தையும், தியாகத்தையும் ஒன்றுபடுத்தி விடியலுக்கு உயிர்கொடுத்த பூமி இது!
இப்போது அது நாதியற்று கிடக்கிறது!
செல்பி அடித்து போஸ்ட் போடுவதற்கு மட்டும் போராட்டம் என்ற பெயரில் இங்கு வந்து #களர்ஸ் காட்டி எஞ்ஜோய் பண்ணி சென்றவர்களுக்கு இந்த வலி புரிய வாய்ப்பில்லை.
உண்மையான உணர்வுடன் உயிர்கொடுத்து போராடியவர்களுக்கே அதன் வலியும், வலிமையும் புரியும்.
3,4 நாட்கள் வெயிலிலும், மழையிலும் வரிசையில் பெற்றோல் இன்றி, கேஸ் இன்றி, அடுப்பின்றி, சோறின்றி, கறியின்றி கனத்துப்போன காலத்தையும், பால் இன்றி, தேனீர் இன்றி குழந்தைகள் கதறிய காலத்தையும் மனிதம் மறந்து விடலாம்.
அதிலும் நம்நாட்டவர்கள் நல்லதையும், கெட்டதையும் மறந்து விடுவதிலும், நன்றி மறப்பதிலும் முதன்மையானவர்கள்.
அதனால்தான் இங்கே மாறி மாறி அதே கூட்டம் ஆட்சிக்கு வருகிறது கொள்ளையடிக்கிறது போகிறது, மறுபடியும் ஆட்சிக்கு வருகிறது.
நேற்று நடந்ததை இன்றும், இன்று நடப்பதை நாளையும் மறந்து விடும் மனித கூட்டம் இங்கிருக்கும் வரை மாற்றம் என்பதற்கு இடமே இல்லை
0 Comments