இலங்கை கண்டியை பூர்வீகமாக கொண்ட பாக்கீர் ஜுனைதீன் கனடாவில் தனது மகனை காப்பாற்ற முயன்று தண்ணீரில் மூழ்கி மரணமானார்.
இதுபற்றி மேலும் அறிய வருவதாவது,
கனடா பிரிடிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்த 57 வயதுடைய பாக்கிர் ஜுனைதீன் நண்பர்களுடன் குடும்பங்கள் சகிதமாக வன்கூவரில் இருந்து மேப்பல்ரிஜ் எலோயட் ஆற்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 31ம் திகதி சென்றுள்ளார்.
அங்கு ஆழமில்லாத ஆற்றில் மகன்களுடன் டியூப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது, இவரின் மகன் ஸெய்த் தண்ணீரில் தவறி விழ அவரை காப்பாற் தந்தை பாக்கீர் தண்ணீரில் குதித்துள்ளார். மகன் ஸெய்த் காப்பாற்றப்பட்ட போதும், ஆழமில்லாத ஆறு என்றவகையில் சன நெறுக்கடியாக இரிந்த போதும் இந்த தந்தை பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நண்பரகளும் அருகில் இருக்கவில்லை. நிலமையை உணர்ந்த அங்கு இருந்தவர்கள் இந்த தந்தையை காப்பாற்றியள்ளனர்.
தண்ணீரில் சுமார் 6 நிமிடங்கள் இருந்ததால் மூச்சையாகி இருந்த இவரை, தீயணைப்பு படையினர், ஹெலிகெப்டர் மூலம் ரிஜ் மெடோவ் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய போதும், அவருடைய மூளை முழுமையாக பழுதாகி இருந்தமையால், செயற்கை முறையிலேயே கருவி மூலம் மூச்சு விடும் நிலையில் இருந்தார்.
வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் கடந்த 3ம் திகதி புதன் கிழமை கருவிகள் அகற்றப்பட்டு அன்னார் உயிரிழந்தார்.
அன்னாரின் ஜனாசாவை ரிஜ் மெடோவ் வைத்தியசாலை பிரிடிஷ் கொலம்பியா முஸ்லிம் சங்கத்திடம் 5ம் திகதி வெள்ளிக்கிழமை கையளித்தனர. அதன்பிரகாகம் ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி பேர்னபி மஸ்ஜிதுல் சலாமில் காலை 10 மணிக்கு தொழுகை நடத்தப்பட்டு காலை 11 மணிக்சிகு சிலெவோக் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என முஸ்லிம் சங்கம் அறிவித்துள்ளது
சுமார் 25 வருடங்களுகுக்கு மேலாக கனடா வன்கூவரில் வசித்த இவர் கண்டி கல்ஹின்னையை பூர்வீகமக கொண்டவர். கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.
சகலருடனும் அன்பாக பழகும் இவர், சமூக சேவைகளில் ஈடுபாட்டுடன் இருந்தவர. அன்னார் பர்ஸானாவின் கணவரும் ஸெய்த் 9 வயது நபீல் 12 வயது ஆகியோரின் தந்தையுமாவார்.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments