நபரொருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிபில-நாகல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
குறித்த பெண் நடத்திச்சென்ற விற்பனை நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) பிற்பகல் குறித்த நபர் நாகல பகுதியில் இயங்கிவரும் குறித்த பெண்ணின் கடைக்கு வந்த போது இருவருக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதோடு, பின்னர் அது மோதலாக மாறியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பின்னர் திடீரென குறித்த பெண் அந்நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு, கடையில் இருந்து பெற்றோலை கொண்டு இறந்தவரின் உடலை தீ வைத்து கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
0 Comments