கிரியுல்ல – பன்னல வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கிரியுல்ல – பன்னல வீதியில் மெல்ல வலான சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments