Ticker

6/recent/ticker-posts

தம்பதெனியவில் மரணித்த சகோதரர் யார்..?

 


 யு.எல்.முஸம்மில் -

குரு­நாகல் நீர்­கொ­ழும்பு வீதியில், குரு­நாகல் நக­ரி­லி­ருந்து 30 ஆவது மைக்­கல்லில் அமைந்­துள்ள பாரம்­ப­ரிய கிரா­மமே தம்­ப­தெ­னிய. 150 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பள்­ளி­வா­சலை அடி­யொற்­றி­ய­தாக இங்கு சிங்­க­ள­வர்­க­ளுடன் ஒன்­றறக் கலந்தே முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்.


இந்நிலையில் இக்­கி­ரா­மத்­துடன் தொடர்­பு­பட்ட தகவல் ஒன்று கடந்த ஒரு சில நாட்­க­ளாக சமூக வலைத்­த­ளங்­களில் அதிகம் பகி­ரப்­ப­டு­வதைக் காண்­கிறோம். அதா­வது, கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அல்­குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்த நிலையில் மர­ணித்த முஸ்லிம் அல்­லாத ஒரு­வரின் ஜனாஸா, இஸ்­லா­மிய சமய முறைப்­படி, அவ­ரது குடும்­பத்­தி­னரின் பங்­கு­பற்­ற­லுடன் அடக்கம் செய்­யப்­பட்­டது என்­பதே அந்த பர­ப­ரப்­பான தக­வ­லாகும். அதா­வது, மர­ணித்­தவர் ஒரு சிங்­க­ளவர் என்றும் அவர் இது­வரை காலமும் வெளியில் கூறாது இஸ்­லாத்தைப் பின்­பற்றி வந்­துள்­ள­தா­கவும் மர­ணித்தால் தன்னை இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்­தி­ருந்­த­தா­கவும் குறித்த தக­வலில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவர் அல்­குர்­ஆனை முழு­மை­யாக மன­ன­மிட்­டி­ருந்­த­தா­கவும் அதில் கூறப்­பட்­டி­ருந்­தது. இந்த தகவல் பல­ரையும் ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யது.


இந் நிலை­யில்தான் இத் தக­வலின் உண்­மைத்­தன்மை என்ன என்று பலரும் ‘விடிவெள்ளி’யைத் தொடர்பு கொண்டு கேட்­டி­ருந்­தனர். இந் நிலையில் இக் கிரா­மத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தம்­ப­தெ­னிய, மஸ்­ஜிதுல் ஹைரியா ஜும்மா பள்ளி நிர்­வாக சபை உறுப்­பினர் எம்.பி.றமீஸ் ஆகி­யோரைத் தொடர்பு கொண்டு நாம் பெற்றுக் கொண்ட தக­வல்­களை இங்கு தரு­கிறோம்.


இச் சம்­ப­வத்தில் குறிப்­பி­டப்­பட்ட உயி­ரி­ழந்­த­வ­ரது இயற்­பெயர் சிரில் ஜய­வர்­தன என்­ப­தாகும். பெரும்­பான்மை இன சகோ­த­ர­ரான இவர் மார­வில பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர்.


கல்விக் கல்­லூ­ரியில் கற்றுக் கொண்­டி­ருந்த சமயம், அங்கு தன்­னுடன் கல்வி பயின்ற உடு­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த ஹிதாயா பேகம் என்ற முஸ்லிம் ஆசி­ரி­யை­யுடன் நட்பு ஏற்­பட்டு அவ­ரையே திரு­மணம் செய்­துள்ளார். இதன்­போதே அவர் இஸ்­லாத்தைத் தழுவி தனது பெயரை ஜவாத் என மாற்றிக் கொண்­டுள்ளார். பின்னர் பிர­தே­சத்தில் ஜவாத் சேர் என்றே எல்­லோ­ராலும் இவர் அறி­யப்­பட்­டுள்ளார். இவர்­க­ளுக்கு பிள்­ளைகள் இரு­வரும் உள்­ளனர்.


ஜவாத் ஆசி­ரியர் இஸ்­லாத்தைத் தழு­வி­யது முதல் இறுதி வரை இஸ்­லா­மிய விழு­மி­யங்­களை முழு­மை­யாகக் கடைப்­பி­டித்து வந்­துள்ளார். அல்­குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய இஸ்­லா­மிய நூல்­களைக் கற்­ற­றிந்­துள்ளார். எனினும் இவர் அல்­குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்­தவர் என பர­விய தக­வல்­களில் உண்­மை­யில்லை.


சுமார் 20 வரு­டங்­க­ளுக்கு மேல் தம்­ப­தெ­னி­யவில் வசித்த இவர் பல பாட­சா­லை­களில் ஆசி­ரி­ய­ராக இருந்­துள்­ள­துடன் பத்­த­ர­முல்லை கல்வித் திணைக்­க­ளத்­திலும் அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றி­யுள்ளார்.


இறு­தி­யாக தம்­ப­தெ­னிய சிங்­கள பாட­சா­லையில் அதி­ப­ராக கட­மை­யாற்றி அங்­கி­ருந்தே ஓய்வும் பெற்­றுள்ளார். தம்­ப­தெ­னிய பள்ளி வாய­லுக்கு இரு மருங்­கிலும் முஸ்லிம் பாட­சா­லையும் சிங்­க­ளப்­பா­ட­சா­லையும் அமைந்­துள்­ளன. அதில் சிங்­கள பாட­சாலை அதி­ப­ராக ஜவாத் கட­மை­யாற்­றி­யுள்­ள­துடன் முஸ்லிம் பாட­சா­லையில் அதி­ப­ராக அவ­ரது மனைவி கட­மை­யாற்­றி­யுள்ளார். பள்­ளியில் அதான் சொல்லக் கேட்டால் கடமை நேரத்­திலும் கூட இவர் பள்­ளிக்கு தொழச் சென்று விடு­வாராம். அத்­தோடு தம்­ப­தெ­னிய பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யிலும் சில காலம் உறுப்­பி­ன­ராக பதவி வகித்­துள்ளார்.


இருந்­த­போ­திலும், பிர­தேச மக்கள் சில­ருடன் ஏற்­பட்ட மனக்­க­சப்­புகள் கார­ண­மாக சிறிது காலம் சமூ­கத்தை விட்டும் ஒதுங்கி வாழ்ந்­துள்ளார். பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­லி­ருந்தும் வில­கி­யுள்ளார். எனினும் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து அமல்­களில் ஈடு­ப­டு­வதை அவர் கைவி­ட­வில்லை.


இவ­ரது மகன் ஒரு­வரும் பள்­ளி­வா­ச­லுடன் நெருக்­க­மாக இருந்­த­போ­திலும், சில சம்­ப­வங்­களால் பின்­னாளில் அவரும் பள்­ளியை விட்டுத் தூர­மா­கி­யுள்ளார். வங்கி அதி­கா­ரி­யான இவர் பெரும்­பான்மை இன பெண்­ணொ­ரு­வ­ரையே திரு­மணம் செய்­துள்ளார். எனினும் இவரும் அவ்­வப்­போது பள்­ளி­வா­ச­லுக்கு வந்­து­போ­வ­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.


ஜவாத் ஆசி­ரி­யரின் மகளும் அவ­ரது தந்­தையின் குடும்­பத்தைச் சேர்ந்த மாற்­று­மத ஒரு­வ­ரையே திரு­மணம் செய்து நிட்­டம்­புவ பிர­தே­சத்தின் வெயாங்­கொட வீதியில் வசித்து வரு­கிறார்.


ஜவாத் ஆசி­ரியர் தனது இறுதி காலத்தில் தனது மகனின் வீட்டில் இருந்­துள்ளார். இந்த சந்­தர்ப்­பத்தில் அவர் நோய்­வாய்ப்­பட்ட நிலையில் வது­பி­டி­வல மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலை­யி­லேயே கடந்த சனிக்­கி­ழமை மர­ணித்­துள்ளார். அன்­றை­ய­தினம் இரவே அவ­ரது ஜனாஸா தம்­ப­தெ­னி­ய­வி­லுள்ள அவ­ரது இல்­லத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஞாயிற்­றுக்­கி­ழமை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.


இவ­ரது உற­வி­னர்கள், இவ­ரது மனை­வியின் உற­வி­னர்கள் கல்­வித்­து­றைசார் நண்­பர்கள், ஊர­வர்கள் என பலரும் ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் கலந்து கொண்­டனர்.


இவ­ரது உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்கள் சார்­பாக ஓரி­ருவர் இரங்கல் உறை­யாற்ற வேண்­டு­மென வேண்டிக் கொண்­டனர். அதற்­கான பூரண அனு­மதி வழங்­கப்­பட்­டது. பலரும் ஜவாத் ஆசி­ரி­யரின் சேவைகள் மற்றும் நற்­செ­யல்கள் குறித்து சிலா­கித்துப் பேசினர். எனினும் பௌத்த மதம் சார்ந்த அனுஷ்­டா­னங்­களோ வழி­பா­டு­களோ எதுவும் நடை­பெ­ற­வில்லை. அத்­துடன் பௌத்த மத­கு­ருக்­களும் அங்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.


ஜனா­ஸா­வுக்­காக நிறை­வேற்­றப்­பட்ட அனைத்து கட­மை­க­ளிலும் பெரும்­பான்மை இன சகோ­த­ரர்கள் அனை­வரும் விருப்­புடன் பங்­கேற்­றனர். பள்­ளி­வா­ச­லினுள் வந்து தொழு­கை­யையும் பார்­வை­யிட்­டனர். முஸ்­லிம்கள் ஜனா­ஸாவை அடக்கம் செய்யும் எளி­மை­யான முறைகள் குறித்து தாம் இன்றே அறிந்து கொண்­ட­தாக குறிப்­பிட்டு அவை குறித்து சிலா­கித்துப் பேசினர். எனினும் அங்கு குழு­மி­யி­ருந்த பெரும்­பான்மை இன சகோ­த­ரர்­க­ளுக்கு இஸ்லாம் குறித்த தெளி­வு­களை சிங்கள மொழியில் வழங்குவதற்கு அவ்விடத்தில் பொருத்தமான மௌலவி ஒருவர் இல்லாமல்போனமை பெருங் குறைபாடாகும்.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனேக முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்ட போதிலும் தம்பதெனியவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையென்றும் இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


அவ்வளவு ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றறக் கலந்து வாழும் இந்த ஊர் தொடர்பில் தேவையற்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வீண் பிரச்சினைகளை உண்டு பண்ண வேண்டாமென்றும் இம் மக்கள் கோரிக்கை எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6



Post a Comment

0 Comments