கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில்

தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கைகால்களை கட்டி வாயில் துணியொன்றை போட்டு, அவர் அணிந்திருந்த 32,500 ரூபா பெறுமதியான தங்க நகையையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6