பௌத்த நாடுகளுக்கிடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு இது பொருத்தமான
தருணம் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடினமான காலங்களில் இவ்வாறான உறவுகள் முக்கியமானதாக இருக்கும்.
மியான்மர், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளுடன் இலங்கை உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நெருக்கடியில் இருக்கும் போது, ஆதரவை வழங்க முற்படும் நாடுகள் பதிலுக்கு அரசியல் ஆதாயத்தை எதிர்பார்ப்பதால், வெளிநாட்டு ஆதரவு குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரபு நாடுகள், ஐரோப்பிய, கத்தோலிக்க நாடுகளும் உள்ளடங்கும் அதேவேளை இலங்கையில் பௌத்த நாடுகளுடன் தொடர்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
புத்தசாசனத்திற்கும் பங்களிக்கக்கூடிய இலங்கை சங்க சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments