Ticker

6/recent/ticker-posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் காலநிலை...!


 இடியுடன் கூடிய மழை பெய்யும் காலநிலை...!


வடக்குகிழக்குவடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில்மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள்உகந்ததாக காணப்படுகின்றது.


சப்ரகமுவமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டிநுவரேலியாகாலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


வடக்குகிழக்குவடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள்அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று சுமார் 12.11 மணியளவில்மன்னியகுளம்அரிவியல்நகர் மற்றும் வாளெயன்மடம் போன்ற இடங்களுக்கு மேலாகசூரியன் உச்சம் கொடுக்கின்றது.

Post a Comment

0 Comments